fbpx

மீண்டும் புரட்டிப் போட வரும் கனமழை..!! இன்று இந்த மாவட்டங்களுக்கு வார்னிங்..!! வானிலை அலர்ட்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கன மழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 10ஆம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

ஆகையால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

இரவில் குழந்தை தூங்காமல் அழுகிறதா..! வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிவது எப்படி..?

Mon Jan 8 , 2024
குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். பொதுவாக அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்வது குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வருவதே ஆகும். ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்களின் உணவுகளை இவை தின்று குழந்தைகளின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. இதன் காரணமாக குழநதைகள் வயிற்றில் புழுக்கள் வந்ததும் அதனை அழித்து விட வேண்டும். இல்லை எனில் அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை […]

You May Like