fbpx

மிக கவனம்…! வரும் 14-ம் தேதி வரை இந்த 17 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 14 -ம் தேதி வரை மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். வங்கக் கடல், குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, மற்றும் ஆந்திர கடலோர எல்லைப் பகுதிகளில் மணி 50 கிலோ மீட்டர் தூரம் வரை சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் கடலோடும் மீனவர்கள் வரும் 14-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதினாவுடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டா உடலில் நடக்கும் அதிசயம்...!

Fri Nov 11 , 2022
புதினாவில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. புதினாவை ஒரு வகையான கீரை என்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவ பொருள் என்றும் கூறலாம். புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என […]

You May Like