தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் மழை விடாமல் பெய்து வருகின்றது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட 19 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று திருச்சி, சிதம்பரம், துறையூர் போன்ற இடங்களில் மழை இல்லை. சேலம் ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகனமழை பெய்து வருகின்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.