fbpx

எதிர்வரும் 4️ நாட்களுக்கு இந்த 14 மாநிலங்களில் கனமழை….! எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்…..!

கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகம் குறிப்பாக பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது இந்த நிலையில் தான் அடுத்த 4 நாட்களுக்கு இந்தியாவின் 14 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரையில் கனமழை முதல் மிக கனமழை வரையில் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மழையானது அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார் என்று 14 மாநிலங்களில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த 14 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கனமழை முதல், மிக கனமழை வரையில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

Next Post

கிருஷ்ணகிரி பட்டாசு கடை தீ விபத்து…..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு…..!

Sat Jul 29 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் இருக்கின்ற ஒரு தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்திருக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பட்டாசு கடைக்கு […]

You May Like