fbpx

6 மாவட்டத்தில் கனமழை… 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று…! வானிலை மையம் தந்த எச்சரிக்கை…!

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளி்ட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain in 6 districts… Cyclonic winds at a speed of 55 kmph

Vignesh

Next Post

பேரிடியாய் வந்த அறிவிப்பு..!! நகைக்கடன் வாங்கியவர்கள் ஷாக்..!! இனி முழு பணத்தையும் செலுத்தி தான் மறு அடமானம் வைக்க முடியும்..!!

Sat Mar 1 , 2025
According to the current new rules, the property can only be re-mortgaged after paying the entire Rs. 3 lakh.

You May Like