fbpx

28, 29 ஆகிய தேதிகளில் 9 மாவட்டத்தில் கனமழை…! 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று..!

தமிழகத்தில் வரும் 28,29 ஆகிய தேதிகளில் 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Vignesh

Next Post

தூள்...! இளம் கலைஞர்களை ஊக்குவிக்க போட்டி... முதல் ரூ.30,000 வழங்கப்படும்...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Tue Sep 26 , 2023
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயது வரை உள்ள இளம் கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் குரலிசை, கருவியிசை, ஓவியம், பரதநாட்டியம், கிராமியக்கலை ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இப்போட்டிகள் 2022-2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு 570 வெற்றியாளர்களுக்கு ரூ 26.60 இலட்சம் ரொக்க பரிசாக, பரிசுத் […]

You May Like