fbpx

தமிழ்நாட்டில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை..!! மாவட்டங்களே உஷார்..!! வந்தது வானிலை அலர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி என மாநிலத்தின் அநேக இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் அதீத கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு மாநிலத்தில் பெரிதாக எந்தவொரு மழையும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே, வரும் நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காசா "வாழத் தகுதியற்றதாக" மாறிவிட்டது!… ஐ.நா வேதனை!

Sat Jan 6 , 2024
இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசா “வாழத் தகுதியற்றதாக” மாறிவிட்டது என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் தாக்குதல்களின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில், இதுவரை 22,313 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 57,296 பேர் […]

You May Like