நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் நாளைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதால் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. இது குறித்த அறிவிப்பில், நாளைய தினம்(25.11.2023) கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.