fbpx

23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வரும் 25-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

நீலகிரி, கோவை, திருப்பூர்‌ உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.. திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல் மற்றும் காரைக்கால் பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுட கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. வரும் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுட கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 25,26 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுட கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப் பகுதிகளில், மன்னார்‌ வளைகுடா, தென்‌ கிழக்கு மற்றும்‌ தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்குலும்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா? ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..!

Fri Jul 22 , 2022
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி […]
செம ’ட்விஸ்ட்’ வைத்த தேர்தல் ஆணையம்..!! அதிமுக இனி எடப்பாடி கையில்..!! ஓபிஎஸ் கதை அவ்ளோதானா..?

You May Like