fbpx

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், மே 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட கடல் பகுதிக்கு மே 22ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: புற்றுநோய்க்கு சுயமாக மருத்துவம்..!! மரணம் வரை சென்று திரும்பிய மருத்துவர்..!! அப்படி என்ன சிகிச்சை..?

Rupa

Next Post

ஆம் ஆத்மி இன்று போராட்டம்!! பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்!!

Sun May 19 , 2024
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்றபோது அவரின் தனி உதவியாளர் பிபவ் குமாரால், தான் கடுமையாக தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் கெஜ்ரிவாலின் தனிஉதவியாளர் பிபவ் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், […]

You May Like