fbpx

தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை..!! உங்க மாவட்டத்திற்கும் பெய்யுமா..? லிஸ்ட் இதோ..!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (26.10.2023) முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் மழைக்கு வாய்பு உள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவி ஆர்டர்..!! ஆனால் பிளிப்கார்ட் அனுப்பி வைத்தது என்ன தெரியுமா..?

Thu Oct 26 , 2023
ஃப்ளிப்கார்ட்டில், ரூ1 லட்சம் மதிப்பிலான சோனி டிவிக்கு பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு, சாதாரண தாம்சன் டிவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலம் வந்தாலே வணிக நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து, வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னணி இ-வணிக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை போட்டியிட்டு தள்ளுபடி மற்றும் ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. இப்படித்தான் ’பிக் பில்லியன் […]

You May Like