fbpx

Rain Alert..! ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 25 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain warning in 10 districts including Ramanathapuram today

Vignesh

Next Post

கேரளா ரயில்வே விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...! ரூ.1 லட்சம் அறிவிப்பு

Sun Nov 3 , 2024
Four killed after getting hit by train in Kerala's Palakkad

You May Like