fbpx

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்..

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்

வரும் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌, மதுரை மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌, தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வடக்கு கேரள கடலோர பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அடுத்த மாதம் முதல்.. இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது...

Fri Sep 2 , 2022
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் வாட்ஸ்அப் ஒன்றாகும், ஆனால் சில ஐபோன் பயனர்கள் அடுத்த மாதத்திலிருந்து வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது. அதன்படி, அக்டோபர் முதல் iOS 10 மற்றும் iOS 11 ஆகிய மாடல்களில் வாட்ஸ் அப் செயலி செயல்படாது. வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த, Apple iPhone 5S, 6 அல்லது 6S பயனர்கள் தங்கள் இயங்கு தளங்களை (operating system) அப்டேட் […]
ஒரு கோடி இந்தியர்களின் கணக்கை முடக்கிய வாட்ஸ் அப் நிறுவனம்...! திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

You May Like