fbpx

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டத்தில் கொட்ட போகும் கனமழை…!

தென் தமிழகத்தில் வழகிழக்கு பருவ மழை தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், அரியலூார், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தார், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, இருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரிப்பு...! அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவு...!

Fri Nov 3 , 2023
தேசிய தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் 48 மணி நேரம் மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. குறித்து முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ X […]

You May Like