fbpx

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும்…

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. வரும் 25ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 26-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுட கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 27-ம் தேதி, மிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும், நாளையும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்குலும்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடக்கக்கூடாது ஸ்ரீமதியின் தந்தை உருக்கம்..!

Sat Jul 23 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி பள்ளி வளாகத்தில் மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவால் மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் […]

You May Like