fbpx

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்யும்.. 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் அறிவிப்பு..

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்..

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. வரும் 14-ம் தேதி முதல் வரும் 16-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

வீட்டு ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Mon Sep 12 , 2022
நடிகர் விக்ரம் வீட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், அவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். […]
வீட்டு ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

You May Like