மிக்ஜாம் புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் 210கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டு இருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை முற்பகல் வடதமிழகம் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலைகொண்டு பிறகு கரைக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை இருக்கும், ஒரு சில இடங்களில் மிக கனமழை, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு, ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதன் காரணம் 4மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் தான் அதி கனமழை பெய்யக்கூடும். காற்றை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த இரு தினங்களை காட்டிலும் தற்போது மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் மழை அடுத்து 1 மணி நேரத்தில் தொடரும் அது நாளை இரவு வரை கனமழை முதல் மிக கனமழை வரை படிப்படியாக அதிகரிக்கும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.