fbpx

மிக அதிக கனமழை பெய்யும்.. இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.. நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மிகவும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மற்றும் டெல்லியில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..

இதனிடையே மகாராஷ்டிராவில் மிகவும் அதிக கனமழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. ஜூலை 11 வரை அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது… இதே போல் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

இதனிடையே கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் மாநிலத்தின் சில பகுதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் கோவா மாநிலத்திலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், கோவா அரசாங்கம் ஜூலை 9 ஆம் தேதி முதல் வகுப்பு முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்தது.

இமாச்சல பிரதேசத்தில் இன்று அதிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும், மாநிலத்தில் சிம்லா, பிலாஸ்பூர், ஹமிர்பூர் மற்றும் யுனா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது..

Maha

Next Post

“ மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ஆன்மீக வியாதிகள்...” முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

Sat Jul 9 , 2022
மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ஆன்மீக வியாதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ளார்.. ரூ.70.27 கோடி செலவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர், ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like