fbpx

இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கியிருந்தாலும், கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் (ஏப். 14) இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் உள்பட தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்திருந்த நிலையில், இரவு வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்.19வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read more: தாஜ்மஹால் முதல் அயோத்தி ராமர் கோயில் வரை.. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Heavy rains are expected in these districts until 7 pm.. Meteorological Center alert..!!

Next Post

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கியிருந்த சொகுசு ஓட்டலில் திடீர் தீ விபத்து..!!

Mon Apr 14 , 2025
A sudden fire broke out at the hotel where the Sunrisers Hyderabad team players were staying.

You May Like