fbpx

இன்னும் 3️ நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும்…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2️ நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி மலை, தொண்டாமுத்தூர் இருட்டுப்பள்ளம், நரசிபுரம் மருதமலை போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, இன்று முதல் குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்திருக்கிறது.

இப்பவே நிலையில் தான் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. தர்மபுரி, இலக்கியம்பட்டி, செந்தில் நகர், வட்டப்பட்டி, நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது இந்த மழை விவசாய பணிகளை ஆரம்பிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேபோல கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. நாயுடுபுரம், ஏரிச்சாலை அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கால், அண்ணா சாலை போன்ற நகர் பகுதிகளிலும் வில்பட்டி, பள்ளங்கி, பாறைப்பட்டி, அட்டுவம்பட்டி போன்ற பல்வேறு மலை கிராமங்களிலும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

Next Post

செந்தில் பாலாஜி ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணையில் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் யார் தெரியுமா…..?

Wed Jul 5 , 2023
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]

You May Like