இரவில் இயங்கும் கடைகளை மூட காவலர்கள் வற்புறுத்தக் கூடாது..!! தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!

இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வற்புறுத்தக் கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன்படி 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 × 7 அனைத்து நாட்களிலும் இயங்கலாம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

DGP Sylendra Babu, 'சாட்டையை சுழற்றுங்க!' - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி  உத்தரவு! - tamil nadu dgp sylendra babu orders take strict action against  rowdies - Samayam Tamil

இருப்பினும், சில இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில் குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது. அதேசமயம், சட்ட விரோதச் செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால், சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

”நாம் நினைக்கும் அளவுக்கு இது சிறிய விஷயம் கிடையாது”..! கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

Wed Jul 13 , 2022
கொரோனா தொற்றின் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தொற்று முடிவுக்கு வருவது என்பது நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொரோனா தொற்றைக் கடந்து வருகின்றனர். ஆனால், மக்களை அடிக்கடி அச்சுறுத்தும் […]
”நாம் நினைக்கும் அளவுக்கு இது சிறிய விஷயம் கிடையாது”..! கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

You May Like