தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 9 மாவட்டங்களில் வாழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸில் இருந்து, 37 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று கூறப்படுகிறது.