அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இன்றும் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.