FasTag என்பது ஒரு டிஜிட்டல் கட்டண வசூல் அமைப்பாகும். அனைத்து வகையான தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கும் இந்த பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகுள் பே போன் பே. டிஎம் உள்ளிட்ட பேமென்ட் ஆப்கள் மூலமாக இதனை நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
சுங்க சாவடிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், அதனை குறைப்பதற்காக மத்திய அரசு இந்த டிஜிட்டல் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது. இந்த பாஸ்ட் டேக் என்பது ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயனரின் இணைக்கப்பட்ட கணக்கில் இருந்து நேரடியாக சுங்க சாவடி உரிமையாளர் கணக்கில் கட்டணத்தை செலுத்த உதவியாக இருக்கிறது.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கும் இந்த பாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த பாஸ்ட் டேக்குகான குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை 100 மற்றும் அதிகபட்ச ரீசார்ஜ் தொகை வாகனத்தின் வகை மற்றும் பாஸ்ட் ட்ராக் சேவையுடன் இணைக்கப்பட்ட கணக்கை பொறுத்து உள்ளது.
இந்த பாஸ்ட் டேக் ஐடி கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி இணையதளத்திற்கு சென்று பாஸ்ட்டேக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை இதன் மூலமாக தெரிந்து கொண்டு, கூடுதல் ரீசார்ஜ்களை செய்துகொள்ளலாம். இதை தவிர்த்து fast tag ஆப்பில் பேலன்சை தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், மிஸ்டு கால் அலார்ட் மூலமாகவும் தெரிந்துகொள்ளமுடியும். பதிவுசெய்யப்பட்ட உங்களுடைய நம்பரிலிருந்து, 8884333331 என்ற நம்பருக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலமாகவும்.உங்கள் பாஸ்ட்டேக்கில் உள்ள பேலன்ஸை தெரிந்துகொள்ளலாம்.