சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் கருப்பு திராட்சையில் உள்ள நன்மைகள் மற்றும் பயன்களை காணலாம்.
உலகில் மொத்தம் 300 வகை திராட்சைகள் உள்ளன. பொதுவாக நமக்குத் தெரிந்த திராட்சை வகைகள் என்றால் கருப்பு திராட்சை,பச்சை திராட்சை,பன்னீர் திராட்சை,காஷ்மீர் திராட்சை என சில வகைகள் மட்டுமே தெரியும். ஆனால் இதை தவிர்த்து ஹைதராபாத் திராட்சை ஆங்கூர் திராட்சை என பல வகைகள் உண்டு. திராட்சைப் பழத்தில் அதிக ஊட்டச் சத்து நிறைந்து உள்ளது. திராட்சைப்பழம் சாப்பிடுவதால் கண்களுக்கு நல்லது. திராட்சைப்பழம் குறைந்த ஆற்றலை வழங்கும் உணவாகும். திராட்சைப் பழத்தில் கெட்ட கொழுப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி திராட்சைப் பழத்தில் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தியும் கொண்டுள்ளது. திராட்சைப்பழம் சாப்பிடுவதால் தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். ஒரு சில இதய வியாதிகளையும் ஏற்படுத்தாமல் நம்மை காக்கும்.
திராட்சை விதைகளில் 80% அளவுக்கு புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை குறைக்கிறது.கருப்பு திராட்சை விதை சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.
நரம்பு வியாதிகள் மற்றும் நினைவிழப்பு வியாதி போன்றவற்றில் இருந்தும் காக்கும். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும். ரத்தத் தட்டுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதையும் சரி செய்யும். ரத்தத் தட்டுகளை சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் பெற்றிருக்கும். ஆன்தோசயனின் என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் சிவப்பு திராட்சையில் அதிக அளவில் உள்ளது. நோய்த்தொற்றை தடுப்பு புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். கருப்பு திராட்சை உடல் உஷ்ணத்தையும் தனிக்கும். குடல் புண்ணை சரிசெய்ய கருப்பு திராட்சை ஒரு மருந்து பொருளாகவும் செயல்படும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தினமும் கருப்பு திராட்சை சாறு குடித்து வரவும்.
காய்ச்சலின் போது கூட திராட்சைப் பழத்தை பயப்படாமல் சாப்பிடலாம். மார்பக சளியை நீக்கவும் கருப்பு திராட்சை உண்ணலாம். குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் கருப்பு திராட்சை சாப்பிடலாம். சிறுநீரக கோளாறுகளைப் போக்கவும் திராட்சைப் பழம் நல்ல மருந்துப் பொருளாக பயன்படும். புற்றுநோய் வராமல் தடுக்கவும் கருப்பு திராட்சை சாப்பிட்டு வரலாம். பன்னீர் திராட்சையை கொஞ்சம் எடுத்து அரை டம்ளர் நீரில் ஊறவைத்து பின்னர் நன்கு காய்ச்சி பிழிந்து அதே அளவு பசும் பால் விட்டு தினமும் பருகி வந்தால் இருதயம் நல்ல வலிமை பெறும். இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அருந்திவர வேண்டும் .
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் காலத்தில் சில பிரச்சனைகள் தோன்றும் கருப்பு திராட்சை பயன்கள். இதை போக்கிடவும் காலையிலும் மாலையிலும் திராட்சை பழமுடன் அதே அளவு பசும் பாலை விட்டு தொடர்ந்தார் போல ஒரு வாரத்திற்கு பருகி வரவேண்டும்.
பன்னீர் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாவதுடன் கண் பார்வை தெளிவுபெறும். பன்னீர் திராட்சையை முந்திய நாள் இரவிலேயே பன்னீர் ஊறவைத்து மறுநாள் நன்கு பிசைந்து பருகி வருவதன் மூலம் இருதய நோய்களை குணப்படுத்தி விடலாம் கருப்பு திராட்சை பயன்கள்.