fbpx

ஆசியக் கோப்பையிலும் விலக வாய்ப்பு.. எப்போதான் திரும்ப வருவாரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க முடியவில்லை.இதையடுத்து கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர் நீண்ட வாரங்களாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், உடல் தகுதி பெறுவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கியில் பயிற்சியை தொடங்கினார். ஏற்கனவே காயமடைந்த பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கேஎல் ராகுலும் இணைந்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் பலரும் விரைவாக இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே ஆசியக் கோப்பைத் தொடருக்கு கேஎல் ராகுல் இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவார் என்று தகவல் வெளியாகியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டரில் அபாரமான ஃபார்மில் விளையாடி வந்த கேஎல் ராகுல், ஆசியக் கோப்பைக்கு திரும்பினால் உலகக்கோப்பைக்கு முன் சிறந்த பயிற்சியாக அமையும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்குள் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல்தகுதியை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு சதவிகிதம் குணமடைந்திருக்கிறார் என்ற தகவலும் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆசியக் கோப்பைக்கும் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவரே தொடர்வார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கவுள்ள நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும். பயிற்சி இல்லாமல் நேரடியாக உலகக்கோப்பைத் தொடரில் கேஎல் ராகுல் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Maha

Next Post

ரத்தாகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு…..? பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை…..!

Sat Jun 24 , 2023
தமிழகத்தைப் பொறுத்த வரையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக […]

You May Like