fbpx

Bank Holidays | சொளையா 14 நாள் பேங்க் லீவு.. மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ!

பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் பிறக்கவிருக்கிறது. இந்த மார்ச் மாதத்தில் வங்கிகளின் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் அதிகமான நாட்கள் வங்கிகள் விடுமுறை இருப்பதால், உங்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை இடையூறுகள் இல்லாமல் மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுவது அவசியம். அதேநேரம் வங்கி விடுமுறை என்பது மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் நேரடியாக செயல்படாது என்றாலும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ (UPI) சேவைகள் போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும். இருப்பினும், தொடர் விடுமுறைகள் காரணமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் சில இடையூறுகளை ஏற்படுத்தக் கூடலாம். 

மார்ச் 5 – பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பஞ்சாப், சிக்கிம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 7 – சப்சார் குட் பண்டிகையை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 8 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 9 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் வாராந்திர விடுமுறை அளிக்கப்படும்.

மார்ச் 13 – ஹோலிகா தஹன் மற்றும் ஆட்டுகால் பொங்கலா பண்டிகையை முன்னிட்டு ராஞ்சி, லக்னோ, கான்பூர், டேராடூன் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 14 : ஹோலி பண்டிகையையொட்டி அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 15 – யாசாங் பண்டிகையை முன்னிட்டு பீகாரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 16 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

மார்ச் 22 – இந்த நாளில் பீகார் தினத்தையொட்டி பீகாரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

மார்ச் 23 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் வாராந்திர விடுமுறை அளிக்கப்படும்.

மார்ச் 27 – ஷப்-இ-காத்ரை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 28 – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஜமாத் உல் விடாவை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் 30 – (ஞாயிறு) – பொது விடுமுறை

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

Read more:நில உரிமையாளர்களே இன்றே கடைசி நாள்..!! கிரையப் பத்திரம், பட்டா வெச்சிருக்கீங்களா..? அப்படினா மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Here is the list of bank holidays for March!

Next Post

இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Fri Feb 28 , 2025
An important order has been issued to the traffic police in Chennai.

You May Like