fbpx

121 உயிரை காவு வாங்கிய ஆன்மீக சொற்பொழிவு!! – பக்தர்களைக் குவித்த ‘போலே பாபா’ யார்? 

உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

தொடர்ந்து, பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 300 பேர் அளவில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இடத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றதாலேயே இத்தனை பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா.

யார் இந்த போலே பாபா?

மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர்சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு அருகிலுள்ள காஸ்கன்ச் மாவட்டத்தின் பட்யாலி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 18 வருடங்களுக்கு முன் உ.பி.யின் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு வகையான துறவிகளை பார்த்த இவருக்கு, அதன் மேல் ஆர்வம் வந்துள்ளது. தானும் அவர்கள் போல் மாறவேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது. இதனால் அவர் கான்ஸ்டபிள் பணியிலிருந்த போதே சிறிய ஆன்மிகப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இவர் மற்றவர்கள் போல் காவி நிற உடை அணியாமல், சாதாரண மனிதராக இருந்து பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். பின்னர் இவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு,  தனது சொந்த கிராமமான பட்டியாலியில் ஆசிரமத்தை அமைத்துள்ளார்.

தற்போது,  உத்தரப்பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க ஒரு சாமியாராகவே வலம்வந்து கொண்டிருந்துள்ளார். இவரது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பரவலாக அவ்வப்போது நடத்தப்படக் கூடியது. இப்படித்தான் ஹத்ராஸிலும் ஆன்மீக சொற்பொழிவுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராமவாசிகள் இவரை ‘போலே பாபா’ (அப்பாவி ஆன்மிகவாதி)’ என்று அழைத்தனர்.  

இந்த பெயர் பின்னர் சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என மாறி விட்டது.  இவரது மனைவியும் மாதாஸ்ரீ எனும் பெயரில், இவருடன் மேடைகளில் அமர்ந்து பிரச்சாரங்கள் செய்து வந்துள்ளார்.  இவருக்கு குழந்தைகள் இல்லை.  இவருக்கு கிடைத்த ஆதரவினால், மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் ஆசிரமங்களை தொடங்கியுள்ளார்.  இவருக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர்.  இவரது கூட்டங்களில் வழக்கமாக பிரச்னைகள் ஏற்படாத காரணத்தினால், போலீசாரும் அதிகம் காணப்படாத நிலை இருந்துள்ளது.

English Summary

Here we can see who is responsible for the incident in Uttar Pradesh, Boleh Baba.

Next Post

அமைதியாக இருக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த இடத்திற்கு போங்க! கின்னஸ் சாதனை படைத்த அறை! எங்கு உள்ளது தெரியுமா?

Wed Jul 3 , 2024
A room at the Microsoft headquarters in the United States has been listed in the Guinness Book of World Records as the quietest room in the world.

You May Like