fbpx

“சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை படித்துவிட்டு 3 நாள் தூங்கவில்லை” -நீதிபதி வேதனை…! சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி…

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு நீதிபதி அதிருப்தி. அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாள் தூங்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை. ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை கீழமை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததற்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று இருவர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் இவர்கள் இருவரை மட்டுமில்லாமல் அவர்கள் தொடர்புடைய அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிற்கு நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு பதிலளிக்க வேண்டும் அதன்பிறகு தான் வாதங்களை வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக நீதிபதி கூறினார்.

மேலும், இரு வழக்குகளின் விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தவறானவை எனவும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளது எனவும், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துபோகவே செய்கின்றனர். உண்மையில் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தீர்ப்புகளுக்கு ஒரு பார்மட் வைத்துக்கொண்டு தேதிகளை மட்டும் மாற்றி விடுதலை என தீர்ப்பு அளிக்கப்டுகிறது, அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாள் தூங்கவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை.

மேலும் நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானவை எனவும். ஆட்சியர்களுக்கு ஏற்றார் போல் அதிகாரிகளும் மாறுவதாகவும் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்தார் நீதிபதி. இதனையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையும், சம்பத்தப்பட்ட அமைச்சர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Kathir

Next Post

Chandrayaan 3 | ”நிலவில் இந்த இடத்தில் தான் லேண்டர் தரையிறங்கும்”..!! இஸ்ரோ கொடுத்த முக்கிய அப்டேட்..!!

Wed Aug 23 , 2023
நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம், கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்ணில் செலுத்தியது. சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்க, விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க […]

You May Like