fbpx

இனி இதற்கு அனுமதி கேட்டால் அபராதம் தான்……! சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை……!

கரூர் மாவட்டம் கடவூர் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இருக்கிறது. இதில் ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது கரகம் சாதித்தல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி கூறி பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என்றும் இது குறித்து உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் அந்த உத்தரவை பின்பற்றாமலும், புரிந்து கொள்ளாமலும் மறுபடியும் பொதுமக்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படுவது சரியல்ல என்று தெரிவித்திருக்கிறார்கள். இனி ஆடல் பாடலுக்கு அனுமதி கூறி பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த மனுதாரருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

அதடி ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Next Post

வேலைக்கு சென்ற இடத்தில் காதலில் விழுந்த சகோதரிகள்..!! வீட்டிற்கு வந்ததும் கிணற்றில் விழுந்த பரிதாபம்..!!

Thu Jun 8 , 2023
சகோதரிகள் இருவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அயன் புதுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியர் பிச்சை, அகிலாண்டேஸ்வரி. இவர்களுடைய மகள்கள் வித்யா (21), காயத்ரி (20). இவர்கள் இருவரும் திருப்பூர் காங்கேயத்தில் தங்கியிருந்தபடியே அங்குள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில், திருவிழாவில் பங்கேற்பதற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், […]

You May Like