காங்கோவில் தீவிரமாக பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோய் 143 பேரை காவு வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 200-க்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இந்நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது.
* 406 சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 143 இறப்புகள் (100 சுகாதார மையங்களில், 43 வீட்டில்)
* பெரும்பாலான கேஸ்கள் குழந்தைகளாக உள்ளனர். அனைத்து கடுமையான கேஸ்கள்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களை அதிகம் தாக்கி உள்ளது.
* அக்டோபர் 24ஆம் தேதி முதல் கேஸ் பதிவானது. நவம்பர் தொடக்கத்தில் கேஸ்கள் உச்சத்தை எட்டியதாகத் தெரிகிறது. ஆனால் பரவல் இன்னும் தொடர்கிறது.
* கடுமையான நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா, தட்டம்மை, ஈ.கோலி மற்றும் மலேரியாவில் இருந்து வரும் ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பங்களிக்கும் காரணியாகும்.
* இந்நோய் குடும்பங்களுக்குள் பரவக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது.
* உணவில் சுகாதாரம் இல்லாமல் போனால் இந்த நோய் ஏற்படலாம். குவாங்கோ மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு நிலை சமீபத்தில் மோசம் அடைந்தது.
* பொதுவான நோய்களுக்குக் கூட சிகிச்சையளிக்க போதுமான மருந்துகள் இல்லை என்றும் குறைந்த தடுப்பூசி கவரேஜ், சரியான டெஸ்டிங் முறைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நோய் பரவல் கிராமங்களில் அதிகளவு ஏற்பட்டுள்ளதாம். மழைக்காலம் காரணமாக சாலை வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் கவரேஜ் குறைவாக உள்ளது. இதனால் ஆன்லைன் சிகிச்சை கூட அளிக்க முடிவது இல்லை. மூக்கில் இருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்துள்ளது.
Read More : திருவண்ணாமலை நிலச்சரிவு..!! உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!