பத்திர பதிவுத்துறையில் பின்பற்றப்படும் சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைப்பதற்காக சந்தை வழிகாட்டி மதிப்பின் களநிலவரத்தை ஆராய்ந்து சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதற்காக உயர் மட்ட குழு ஒன்று அறிவிக்கப்படும் என தமிழக அரசு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தற்போது இதற்கான உயிர் மட்ட குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி r.வாசுகி கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்று இருக்கிறார். இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சொத்துக்களின் சந்தை வழிகாட்டி மதிப்பு என்பது அரசு ஆவணங்களின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பாகும். ஒரு சொத்தின் சந்தை மதிப்பும் அதன் வழிகாட்டி மதிப்பும் ஒன்றாக இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சொத்துக்களின் சந்தை மதிப்பானது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி குறைவானதாகவே இருக்கும்.
சந்தை வழிகாட்டி முறைகளை சீர் செய்வதற்காக கள நிலவரங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வழிமுறைகளை பரிந்துரைப்பதற்கு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு கள நிலவரங்களை ஆராய்ந்து சந்தை வழிகாட்டி மதிப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பதிவுத்துறைக்கு சிபாரிசு செய்யும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் திருமதி ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருக்கிறார்.