fbpx

இரட்டை கொலை செய்து 30 வருடங்களுக்குப் பிறகு தன் வாயாலேயே மாட்டிக்கொண்ட நபர்…..! அலேக்காக தூக்கிய போலீஸ்….!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விக்ரோலி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் பவார் (49). இவர் 30 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலை குற்றத்துக்காக தற்போது கைது செய்வதற்காக இந்த களத்திற்கு காரணம் அவர்தான் என்பதுதான் முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1993 ஆம் வருடம் அவினாஷ் லோனாவாலா பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது அந்த பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்த தன்ராஜ் மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி உள்ளிட்ட தம்பதிக்கும், இவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவினாஷ் பவார் 19 வயது இளைஞராக இருந்த நிலையில் தன்னுடைய பணத்தேவைக்காக கடைக்காரரான தன்ராஜ் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 1993 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அவிநாஷ் அவருடைய இரண்டு நண்பர்களும் தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவருடைய மனைவி தனலட்சுமியையும் கொலை செய்து வீட்டில் இருந்த பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். திருடிய பொருட்கள் மற்றும் நகைகளை பிரித்துக் கொண்டு ஊரிலிருந்து வெளியேறிய அவினாஷ் முதலில் சீரடிக்கு சென்று 2️ நாட்கள் தங்கி உள்ளார்.

பின்னர் டெல்லிக்கு சென்று ஒரு வருடம் பணிபுரிந்த அவர் அங்கிருந்து தானே பகுதிக்கு வந்துள்ளார். அதன் பிறகு அகமது நகருக்கு குடிபெயர்ந்த அவர் பிரமிளா என்ற பெண்ணை கடந்த 1999 ஆம் வருடம் திருமணம் செய்து மும்பை விக்ரோலி பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த காலகட்டத்தில் தான் அடையாளம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவினாஷ் என்ற தன்னுடைய பெயரை அமித் என்று மாற்றி இருக்கிறார்.

இத்தகைய நினைவில் தான் சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த அவினாஷ் போதையில் தான் கொலை செய்த உண்மையை கூறியுள்ளார். இந்த தகவல் மும்பை குற்றப்பிரிவு காவலர் தயா நாயக்கின் கவனத்திற்கு சென்ற நிலையில், காவல்துறையினர் அவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதன் மூலமாக 30 வருடங்களுக்கு முன்னர் நினைவற்ற இரட்டை கொலை வழக்கில் அவினாஷ் தன்னுடைய வாக்குமூலத்தாலேயே காவல்துறையிடம் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்

Next Post

45 வயது நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்..!! யார் அவர் தெரியுமா..?

Sun Jun 18 , 2023
சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது பிஸி ஹீரோயினாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர், “மேயாத மான்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த படம் “பொம்மை”. இதில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இணையாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், பிரியா பவானி […]

You May Like