fbpx

’அவரை நியமித்தது செல்லாது.. நான் தான் மதுரை ஆதீனம்’..!! பரபரப்பை கிளப்பிய நித்தியானந்தா..!! ஐகோர்ட் கிளையில் வழக்கு..!!

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் கூறி, நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்நிலையில், நானே மதுரை ஆதீனம் என நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், “கடந்த 2012ஆம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார்.

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த 2021இல் காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் எதிர் மனுதாரர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, தற்போதைய மதுரை ஆதினம், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Chella

Next Post

47 வயதில் மீண்டும்..!! சினிமாவில் களமிறங்கும் ரம்பா..!! குஷியில் ரசிகர்கள்..!!

Wed Nov 1 , 2023
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான “உள்ளத்தை அள்ளித்தா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர், கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]

You May Like