சீனாவில் பரவி வந்த HMPV வைரஸ் சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் லேசானது முதல் தீவிர பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் பொதுவான அறிகுறிகளாக இருக்கும் குளிர் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகளை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. சிலருக்கு நிலைமை மோசமடையலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு செலவாகும்..?
இந்தியாவில் நாக்பூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் HMPV வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. HMPV வைரஸ் இருப்பதை கண்டறியும் சோதனைகளில் BioFire panel போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் அடங்கும். இது HMPV உட்பட பல நோய்க்கிருமிகளின் பாதிப்புகள் இருக்கிறதா? என்பதை ஒரே நேரத்தில் சோதிக்க உதவுகிறது.
டாக்டர் லால் பாத்லேப்ஸ், டாடா 1எம்ஜி லேப்ஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் லேப்ஸ் ஆகிய நன்கு அறியப்பட்ட ஆய்வகங்களில் இந்த பரிசோதனைக்காக செலவு ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கிறது. Respiratory group-ல் உள்ள மற்ற சோதனைகளையும் சேர்த்து மொத்த பரிசோதனைக்கும் ரூ.20,000 வரை செலவாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ் குளிர் சீசன்களில் மிகவும் பரவுவதாகவும், சுவாச குழாயில் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு இந்த வைரஸ் பெரும்பாலும் தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பொதுவான சளி அறிகுறிகளாக மட்டுமே வெளிப்படுகிறது. சுவாசம் சார்ந்த பிரச்சனைகள், சயனோசிஸ், மூச்சுத்திணறல், நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு உள்ளிட்ட கடுமையான நிலைமைகளை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருபவர்களுக்கு ஏற்படுத்த கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More : 100 மாவட்ட செயலாளர்கள்..!! இறுதி செய்த தவெக..? நேரில் சந்திக்கிறார் விஜய்..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!