fbpx

நெல்லையை தொடர்ந்து மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்னதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மேலும் தென்காசி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More: 55 கீ.மீ. வேகத்தில் பலத்த காற்று… மீனவர்கள் யாரும் கடலுக்கு போக வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை

English Summary

Holiday announcement for schools in one more district after Nellai..!

Kathir

Next Post

ஐயப்ப பக்தர்களே!. தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும்!. தேவசம் போர்டு!

Wed Nov 20 , 2024
Ayyappa devotees! Daily online bookings will increase to 80 thousand!. Devasam board!

You May Like