கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கவுதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பனிப் பொழிவு காரணமாக லக்னோ மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வருகிற 31ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் 3 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.