fbpx

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை..? இன்றைக்குள் முதல்வர் அறிவிப்பார்..!! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்..!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆவு மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மணி நேரம் மழை நின்றால் கணேசபுரம், பெரம்பூர் சுரங்க பாதையில் தேங்கி மழை நீர் வெளியேற்றப்படும். சென்னைக்கு உதவ 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கின்றனர்.

பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். மழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வு செய்த பின் விடுமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார்” என்று கூறினார்.

Read More : ”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சு கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

English Summary

Chief Minister Stalin will take a decision regarding school holidays by this evening.

Chella

Next Post

இயற்கை விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

Tue Oct 15 , 2024
1,00,000 rupees for the first prize, 60,000 rupees for the second prize and 40,000 rupees for the 3rd prize.

You May Like