அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதா நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களம், நட்சத்திர பட்டாளம் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய கேப்டன் மில்லர் அதை நிறைவேற்றியுள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் சிறப்பாக உள்ளதாகவும் திரைக்கதை, கதாப்பாத்திரங்கள், கதைக்களம் என அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனுஷ், நடிப்பில் கலக்கியுள்ளதாகவும், படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.