வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது.
பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள் 22 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாக இருக்கிறது 442 கிராமங்களில் வசித்து வரும் 19,12,337 நபர்கள் இந்த புயலால் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் பகுதிகளுக்கு இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். அதன் பிறகு அவர் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார்.
அதன் பிறகு பூஜ்யில் நாராயணசாமி கோவில் தரிசனம் செய்ய உள்ளார். அதோடு பாதிக்க பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மற்ற வசதிகளை மதிப்பாய்வு செய்வார் என்று உள்துறை அமைச்சக தகவல்கள் கிடைத்திருக்கின்றன