ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்வில் நாள்தோறும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அத்தியாவசியமான முக்கிய தேவை உணவு. அப்படி இருக்கக்கூடிய உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதுடன் உணவு உட்கொள்ளும் போது சில விடயங்களை செய்யாமல் தவிர்ப்பது அந்த சத்துக்கள் உடலில் முழுமையாக சென்று சேர உதவியாக இருக்கும். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
உணவு உட்கொள்ளும் முன்பு தண்ணீர் சாப்பிடுவதால் உடல் பெரிதாகி சாப்பாடு எளிதாக உள்ளே செல்ல உதவியாக இருக்கும். உணவு உட்கொள்ளும் போது இடையில் அவ்வப்போது அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பி உணவு சாப்பிடுவதை குறைத்து விடலாம்.
உணவு உட்கொள்ளும் போது அடுத்தவர்களிடம் உரையாடிக்கொண்டே சாப்பிடக்கூடாது. மேலும் உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் நொறுக்கு தீனி உள்ளிட்ட பண்டங்களை உட்கொள்ளக்கூடாது. உணவு சாப்பிடும் போது உணவுடன் பொறியல், கூட்டு போன்றவற்றை தவிர்த்து வறுத்த எண்ணெய் பொருட்கள் நொறுக்கு வகைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
மேலும் உணவு சாப்பிட்ட பிறகு அதிக இனிப்பான பண்டங்களை சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படலாம். சாப்பாட்டிற்கு பிறகு ஐஸ்கிரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான பொருட்களையும் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நன்று.