மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிரி என்றாலே அது வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு தான். ஆம், இந்த இரண்டு வெள்ளை நிற பொருள்களும் மனிதனின் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நமக்கே தெரியும். குறிப்பாக உப்பு அதிகம் சாப்பிடுவதால் பிபி, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதனால், சிறுநீரக பாதிப்பு உள்ளர்கள், வாதம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் எப்போதுமே கம்மியான அளவு உப்பை மட்டும் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ஒரு கிராம் உப்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, பி.பி இருப்பவர்கள் முதலில் உப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட வேண்டும்.
பொதுவாகவே, கல் உப்பை, முருங்கைக்கீரையுடன் சேர்த்து மண்சட்டியில் வறுத்து, அந்த உப்பை தினமும் பயன்படுத்தலாம். மேலும், வெறும் கல் உப்பை வறுத்து ஒரு துணியில் சுற்றி, காலில் வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறைவது மட்டும் இல்லாமல், வலியும் குறையும். இதற்காக நாம் கண்ட மருந்தை தேய்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், கல் உப்புடன் மஞ்சள்தூள், சிறிது குப்பைமேனி இலை, தேங்காய் விட்டு அரைத்து அதனை அலர்ஜி மற்றும் புண் உள்ள இடங்களில் தடவலாம். இதனால், எந்த புண்ணாக இருந்தாலும் விரைவில் கனமாகும். மேலும், குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள், படிகார நீர் ஆகியவற்றை சேர்த்து குளிப்பதால், எல்லா விதமான சரும பிரச்சனைகளும் குணமாகும்.