தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உடல் எடை, ஆரோக்கியமான முறையில் தான் குறைய வேண்டும். இல்லையென்றால் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இயற்கையான முறைகளை பின்பற்றினால், நீண்ட காலத்திற்கு உடல் எடைக் கட்டுப்பாடாக இருக்கும். அந்த வகையில், உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் இரவில் சாப்பிட்ட பிறகு இந்த ஒரு பானம் குடித்தால், எளிதாக தொப்பையும் குறையும், உடல் எடையையும் குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார்.
அந்த வகையில், உடல் எடையைக் குறைப்பதற்கான பானத்தைத் தயாரிக்க, சன்னமான லவங்கப்பட்டை பொடி 2 சிட்டிகை, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, மிளகுபொடி 2 சிட்டிகை, இவை அனைத்தையும் 200 மி.லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த பானத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. உங்களுக்கு இனிப்பு சுவை தேவைப்பட்டால், சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பானத்தை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் உடல் எடை ஒரு சில வாரங்களிலேயே குறையும். மேலும், வெதுவெதுப்பான சூட்டில், இந்த பானத்தை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பதால் பி.சி.ஓ சார்ந்த பிரச்னைகள், ஹார்மோன் சார்ந்த பிரச்னைகள், தைராய்டு சார்ந்த பிரச்னைகள், அதிக உடல் எடை போன்ற பிரச்சனைகுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
Read more: இனி தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை.. இந்த ஒரு கசாயம் குடிச்சா போதும்..