திருச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் குடிமக்கள் 76 பர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
திருச்சி அருகே உள்ளது மடத்துக்குளம் அங்குள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதற்காக தீர்த்தம் எடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேன்கூடு எதிர்பாராதவிதமாக கலைந்துள்ளது. இதனால் தேனீக்கள்அங்கிருப்பவர்களை கொட்ட ஆரம்பித்தது.
சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். சிலர் சேலையை தலையில் போட்டபடி அங்கிருந்து செல்ல முயற்சித்தனர். ஒருவரையும் விடாமல் அனைவரையும் சரமாரியாக தேனீக்கள் தாக்கின. வயதானவர்கள் , குழந்தைகள் என 76 பேர் காயம் அடைந்தனர். வயதான சிலருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மடத்துக்குளம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒருவர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிகிச்சை பெற்று வந்தவர்களை எம்.எல்.ஏ. மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.