fbpx

கொடூர சம்பவம்!… இரண்டு குழுக்கள் தாக்கிக்கொண்டதில் 113 பேர் உயிரிழப்பு!…. நைஜீரியாவில் ராணுவ வீரர்கள் குவிப்பு!

நைஜீரியாவின் மன்ஷு கிராமத்தில் இரண்டு கும்பலை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆயுத தாக்குதலில் 113 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடமத்திய மாகாணமாக பிளாட்டியூ உள்ளது. அங்குள்ள மன்ஷு கிராமத்தில் இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடு கோஷ்டி மோதலாக உருவானது. இரண்டு கும்பலை சேர்ந்த நூற்றக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை பயன்படுத்தி கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் உதவியை நாடினர். இதனால் மன்ஷு கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Kokila

Next Post

முகேஷ் அம்பானியின் மெகா பிளான்!… டிஸ்னி ஸ்டார் - ரிலையன்ஸ் ஒப்பந்தம் கையெழுத்து!… முக்கியத்துவம் என்ன?

Tue Dec 26 , 2023
டிஸ்னி ஸ்டார் – ரிலையன்ஸ் தங்கள் மெகா இணைப்பை இறுதி செய்யும் வகையில் பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இணைப்பை நோக்கி ஒரு படி முன்னேறி, ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஸ்டார் கடந்த வாரம் லண்டனில் பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இடையேயான மெகா இணைப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இறுதி செய்யப்படும். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் […]

You May Like