fbpx

பிணைக் கைதிகள் விடுவிப்பு!. யார் அந்த 4 ராணுவ வீராங்கனைகள்?. வெளியான அறிவிப்பு!.

Hostage: இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, காசாவில் 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த நான்கு பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் இன்று (25.01.2025) விடுவிக்கப்படவுள்ளனர்.

பரிமாற்றப்படவுள்ள 4 பேரும் இஸ்ரேல் – காசா எல்லையை கண்காணித்த இராணுவ பிரிவொன்றில் செயற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிமாற்றத்தின் போது, 3 இஸ்ரேலியப் பணயக்கைதிகளும் 90 ஹமாஸ் சிறைக்கைதிகளும் பரிமாற்றப்பட்டனர்.
மேலும், 26 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸிடம் இருப்பதாகவும் அவர்கள் எதிர்வரும் 5 வாரங்களில் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 07ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹமாஸ் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதலில் 46,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மத்தியக் கிழக்கில் ஒரு அமைதி நிலை உருவாகியுள்ளது.

Readmore: ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா?. தினமும் காலையில் இதை குடியுங்கள்!.

English Summary

Hostages released!. Who are those 4 female soldiers?. Announcement released!.

Kokila

Next Post

தமிழகமே...! இன்று விடுமுறை கிடையாது... அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்...!

Sat Jan 25 , 2025
There is no holiday today... All schools will operate as usual.

You May Like