கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப் பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக் (62) இவர் சொந்த வேலையின் காரணமாக நேற்று முன்தினம் தேனி மாவட்டத்திற்கு வந்திருந்தார். கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருக்கின்ற தனியார் ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டலுக்கு வெளியே நின்று இருந்த சில நரிக்குறவர்கள் இவரிடம் யாசகம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் சித்திக் பணம் கொடுக்காமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று 5 பேருக்கும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் மேலும் மூன்று பேர் வந்துள்ளனர் அவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதைக் கண்ட அந்த பகுதியைச் சார்ந்த யாசகர்கள் சிலரும், நாடோடிகளும் திரண்டு வந்தனர்.
ஆனாலும் சித்திக் கன்னடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஓட்டல் முன்பு நாடோடிகள் வெகு நேரம் கூடி நின்றதன் காரணமாக, பரபரப்பு உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும் சித்திக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரித்த நிலையில் கடை ஊழியர் கோவிந்தராஜ் என்பவர் சித்திக்கை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த சித்திக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தேனை காவல் துறை ஆய்வாளர் ஜீவானந்தம் கடை ஊழியர் கோவிந்தராஜை கைது செய்தார்.