fbpx

வாடகைக்கு வீடு..!! மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பிரபல பெண் புரோக்கர் அதிரடி கைது..!!

இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர் தனது கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மடிப்பாக்கம் ராமலிங்கா தெருவில் உள்ள வீட்டிற்கு இரவு நேரங்களில் சந்தேக நபர்கள் அதிகளவில் வந்து செல்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, விபச்சார தடுப்பு பிரிவு – 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான பெண் காவலர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, சிலர் அந்த வீட்டிற்கு வந்துச் செல்வது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் பூர்ணிமா (35) தனது கூட்டாளியான திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பெண் புரோக்கர் பூர்ணிமா மற்றும் ரவியை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய வடமாநில பெண் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களுக்கு புகைப்படம் மற்றும் தொடர்புகொள்ள பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : இனி கிச்சனில் இருந்து இருந்த பொருட்களை தூக்கிப் போடாதீங்க..!! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணிப் பாருங்க..!!

English Summary

Police arrested a female broker and her accomplice who were operating a sex trade with young women.

Chella

Next Post

பெண்களிடம் அதிகம் பேசாத ஏ.ஆர். ரஹ்மான் தனது முன்னாள் மனைவி சாய்ராவுக்கு எப்படி Propose பண்ணாரு தெரியுமா?

Wed Nov 20 , 2024
AR doesn't talk much to women. Do you know how Rahman proposed to his ex-wife Saira?

You May Like