fbpx

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.200 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,535க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.77.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,100க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

விளையாட்டு விபரீதமானது…..! நோ பால் கொடுத்ததால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்….!

Mon Apr 3 , 2023
ஒடிசா மாநிலம் சவுத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் இருக்கிறது. அங்கே உள்ளூர் நண்பர்கள் ஒன்று இணைந்து பிரண்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்று விளையாடினார்கள். பொழுதுபோக்குக்காக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரௌட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக செயல்பட்டார். போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் வீசியதாக சைகை காட்டி இருக்கிறார். அது நோ பால் இல்லை என்று […]

You May Like