fbpx

’உத்தரவை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்க முடியும்’..? பதஞ்சலி நிறுவன வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்..!!

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன?. எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்?

அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா?. வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடியும்?. நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்”? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

Read More : Drugs | போதைப் பொருள் கடத்தல் வழக்கு..!! இயக்குனர் அமீரிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!

Chella

Next Post

பெங்களூர் ரோடு ஷோ-வில் பங்கேற்கும் அமித்ஷா

Tue Apr 2 , 2024
மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் பிரதமர் மோடி இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு பெங்களூரு வந்த அமித்ஷா, […]

You May Like